நூதன இணையக் குற்றவாளிக்கு இரையான பெங்களூரு சிறுவன்.


பெங்களூரு சிறுவனிடம் சமூகஊடகம் வழியாகப் பழகி, சிறுவன் மற்றும் குடும்பத்தின் நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்று மிரட்டிய இணையக் குற்றவாளி பற்றிய தகவல் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், ஜூன் 2016-ல் ஃபேஸ்புக்கில் அறிமுகம் இல்லாதவருடன் நண்பர் ஆகியுள்ளார். அந்த ஃபேஸ்புக் கணக்கு தேஜஸ்படேல் என்னும் பெயரில் 21 வயது இளைஞன் என்பது போலக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. சிறுவன் தன்னுடைய பெற்றோருக்குத் தெரியாமல் தேஜஸுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.
நாட்கள் செல்லச் செல்ல சிறுவனின் நம்பிக்கையைப் பெற்ற தேஜஸ், அவருக்கு ஆபாசப் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கி இருக்கிறார். ஏப்ரல் 2017-ல் சிறுவனிடம் பேசி அவரின் நிர்வாண புகைப்படங்களையும் மெசஞ்சர் வழியாக அனுப்பச் சொல்லியிருக்கிறார். அத்துடன் தேஜஸ் சிறுவனுடைய பெற்றோரின் நிர்வாண புகைப்படங்களையும் பெற்றுள்ளார்.
படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி
அதைத் தொடர்ந்து சிறுவனை மிரட்டத் தொடங்கிய தேஜஸ், அவர்களின் நிர்வாண புகைப்படங்களை ஆபாச வலைதளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் படங்கள் வெளியாகாமல் இருக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து மே மாதத்தின் ஆரம்பத்தில் சிறுவன் தன் பெற்றோரிடம் இது குறித்துக் கூறியுள்ளார்.
இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் மே 20-ம் தேதி காவல்துறையில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.