இந்திய ஓபன் அலைச்சறுக்கு போட்டியில் சென்னை வீரர்கள் ஆதிக்கம்.


இந்திய ஓபன் அலைச்சறுக்கு போட்டி கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சசிஹிதுலு கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று சென்னை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பல்வேறு பிரிவுகளின் அரைஇறுதிக்கு அவர்கள் முன்னேறினர்.
17 முதல் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் ஜூனியர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் 23 பேர் கலந்து கொண்டனர். இதில் சென்னையை சேர்ந்த மணிவண்ணன், சூர்யா, அஜித் கோவிந்த், ராகுல் கோவிந்த், சதீஷ் ஆகியோருடன் கேரளாவை சேர்ந்த ரமேஷ் என்ற வீரரும் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மகளிருக்கான ஓபன் பிரிவில் 8 வீராங்கனைகள் அரை இறுதிக்கு முன்னேறினர். மங்களூருவை சேர்ந்த தன்வி ஜெகதீஸ், அனீஷா நாயக், சின்சானா கவுடா, சென்னையை சேர்ந்த விலாசினி சுந்தர், சிருஷ்டி செல்வம், பாண்டிச்சேரியை சேர்ந்த சுகாசினி தயமன், மணிபாலை சேர்ந்த இஷிதா மால்வியா, ரஷ்யாவின் ஓல்கா கோசன்ஸ்கோ ஆகியோர் அரை இறுதியில் நுழைந் தனர்.
ஆடவருக்கான சீனியர் பிரிவில் (22 முதல் 30 வயது வரை) 8 பேர் அரை இறுதிக்கு முன்னேறினர். இதில் சேகர் பட்சாய், தரணி செல்வகுமார், மணிகண்டன் அப்பு தேசப்பன், விக்னேஷ் விஜயகுமார் ஆகிய 4 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். மகாபலிபுரத்தை சேர்ந்த சந்தோஷ் மூர்த்தி, ராகுல் பன்னீர்செல்வம், கோவாவை சேர்ந்த சுவப்னில் பிங்கே, கேரளாவின் வர்கீஸ் அந்தோணி ஆகியோரும் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளனர்.
16-வது வயதுக்கு உட்பட்டோருக்கான குரோம்ஸ் பிரிவிலும் தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். சென்னையை சேர்ந்த சந்தனகுமார், எம்.மணிகண்டன், அஜீஸ் அலி, மணிகண்டன், மகாபலிபுரத்தை சேர்ந்த சுனில் தயாளன், சிவராஜ் பாபு ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர். இந்த 4 பிரிவுகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.