இந்திய -பாகிஸ்தான் எல்லையில் நீடிக்கும் பதற்ற நிலை.


இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ நிலைகள் மீது இந்தியா குண்டுவீசி அழித்த காட்சிகள் வீடியோவில் வெளியானதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பதற்றநிலை அதிகரித்துள்ளது.
பதிலுக்கு பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசி இந்திய நிலைகளை தகர்த்ததாக பாகிஸ்தானும் வீடியோ ஒன்றை வெளியிட்டது. ஆயினும் இந்த வீடியோ போலியானது என்றும் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் ஏதும் பறக்கவில்லை என்றும் இந்திய ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய அசாதாரண சூழலில் இரு தரப்பிலும் பதற்ற நிலை நீடிக்கிறது.
தினமும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறுவதும் எல்லையில் துப்பாக்கிச் சண்டை நீடிப்பதும் ஒருபுறமிருக்க மறுபுறம் தீவிரவாத ஊடுருவல்களும் அதிகரித்துள்ளதால் இரட்டிப்பு சவால்களை இந்திய வீரர்கள் சந்தித்து வருகின்றனர். சுமார் 778 கிலோ மீட்டர் நீளும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோடு பகுதியில் இருநாட்டு ராணுவப்படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. இரவு பகலாக ராணுவ வாகனங்கள் எல்லையில் ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளன.
ஆயினும் இது போர் ஒத்திகையல்ல என்றும் அத்தகைய அச்சுறுத்தல் ஏதுமில்லை என்றும் உயரதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இமய மலைப்பகுதிகளில் பனியுருகத் தொடங்கியுள்ளதால் ((16 முதல் 22 ஆயிரம் அடி உயரம் உடைய)) மலைச்சிகரங்கள் வழியாக தீவிரவாத ஊடுருவல்களைத் தடுக்க அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மலைகளை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.