தேவை ஏற்பட்டால் ஏவுகணை சோதனை நடத்துவோம்: ஈரான்.


தேவை ஏற்பட்டால் ஏவுகணை சோதனைகள் நடத்துவோம் என்று ஈரான் அதிபர் ரசான் ஹவ்ரானி கூறியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானை கடுமையாக சாடி பேசினார். ஈரான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது என்றும், அந்நாட்டை அணுஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ட்ரம்ப்பின் கருத்துக்கு ஈரான் நாட்டின் அதிபர் ரசான் ஹவ்ரானி கூறும்போது, "தேவை ஏற்பட்டால் எங்கள் நாடு ஏவுகணை சோதனைகளை நடத்தும். அதற்கு யாரிடமும் நாங்கள் அனுமதிக்க கேட்க அவசியம் இல்லை.
எங்களது ஏவுகணை சோதனைகள் எங்களது பாதுகாப்பு மற்றும் அமைதிக்காகவே தவிர பிறரை தாக்குவது எங்கள் நோக்கம் அல்ல" என்றார்.
முன்னதாக ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், மீறி நடத்தினால் அதன் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க உள்ளிட்ட வல்லரசுகள் அந்நாட்டுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.