ஐஏஎஸ் முதல்நிலை தேர்வுக்கு ஹால் டிக்கெட்.


ஜூன் 18-ம் தேதி நடக்கவுள்ள சிவில்சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை யுபிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு உயர் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஜூன் 18-ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள நபர்களுக்கான ஹால்டிக்கெட், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) இணையதளத்தில் (www.upsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை, தகுதியின்மையால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்த காரணத்தையும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படம் தெளிவாக இல்லாவிட்டால், அவர்கள் மட்டும் ஹால்டிக்கெட்டுடன் பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டையை (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை) தேர்வு மையத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.