மீன்பிடி படகுகளுக்கு ரூ.285 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு: தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.


தமிழகத்தில், 500 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தயாரிப்பு மற்றும் மீனவர்களுக்கான நிவாரணம் ஆகியவற்றுக்காக ரூ.285 கோடிக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. இதன்படி ஆழ்கடல் மீன்பிடிக்கும் திட்டத்தை தமிழக அரசு மீனவர்களிடம் தெரிவித்தது. மீனவர்கள் இதற்கு சம்மதித்ததன் அடிப்படையில், தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. இதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள 2 ஆயிரம் பெரிய இழுவை மீன்பிடி படகுகளுக்கு பதில் புதிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளை கடலுக்குள் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக, மத்திய அரசின் உதவி கோரப்பட்டது. மத்திய அரசு முதல்கட்டமாக 750 படகுகளை மாற்றி புதிய படகுகள் வழங்க ரூ.200 கோடிக்கு ஒப்புதல் அளித்தது. பழைய படகுகளை கடலில் இருந்து எடுப்பதால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை சரிகட்டும் வகையில் ஒரு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக 500 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்காக மத்திய அரசின் ரூ.200 கோடி நிதியுடன், தமிழக அரசின் பங்கு ரூ.80 கோடி மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.5 கோடியே 25 லட்சம் என, மொத்தம் ரூ.285 கோடியே 25 லட்சத்துக்கு தமிழக அரசு நேற்று நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.