பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில காவலாளி தந்தை.


சென்னை தியாகராயர் நகரில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
தியாகராயர் நகர் சீரணிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர குமார். அதே பகுதியில் தனியார் கட்டட காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு 12 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். மகள் அருகே உள்ள பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பும், மகன் 8 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். பீகாரைச் சேர்ந்தவரான சுரேந்திர குமார் திருமணமாகி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சென்னையில் குடியேறியுள்ளார். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான சுரேந்திர குமார் தினமும் குடித்துவிட்டு தனது மகளிடம் தவறாக நடந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சுரேந்திர குமார் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைக் கண்ட அவரது மனைவி சுரேந்திர குமார் மீது தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து சுரேந்திர குமாரை கைது செய்த மகளிர் போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2 வருடங்களாக சுரேந்திர குமார் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேந்திர குமாரை கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.