காவல் ஆய்வாளர் எனக் கூறி வழிபறியில் ஈடுபட்ட போலி போலீஸ் கைது.


சென்னை புரசைவாக்கத்தில், காவல் ஆய்வாளர் எனக் கூறி வழிபறியில் ஈடுபட்ட போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். அயனாவரத்தைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவர், நேற்று தமது பெண் தோழியுடன் மெரினா கடற்கரைக்குச் சென்றுவிட்டு, புரசைவாக்கம் அருகே இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் வந்த நபர், காவலரின் தோரணையில் மறித்துள்ளார். இருவரும் காதலர்களா என்று கேட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமது செல்போனில் படம் பிடித்து, பணம் தராவிட்டால், காதல் விவகாரத்தை வீட்டில் கூறிவிடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தற்போது பணம் இல்லை என்றதும், ஞாயிறன்று காலை அபிராமி திரையரங்கம் அருகே வந்து பணத்தை தருமாறு தெரிவித்தார். இதுகுறித்து, சூர்யபிரகாஷ் புகார் அளித்ததும், சாதாரண உடையில் அங்கு சென்ற போலீசார் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை போலி போலீஸ்காரர் வாங்கும்போது கையும், களவுமாகப் பிடித்தனர். விசாரணையில் போலீஸ் போன்று மிரட்டியவர், திருவேற்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்தது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.