ஓசூர் போடூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் 25 காட்டு யானைகள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போடூர் வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரியும் 25 யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
கர்நாடக வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீருக்காக வந்துள்ள யானைக்கூட்டம், போடூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள போடூர், ராமாபுரம், ஆளியாளம், பன்னப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து பயிர்களை அழித்து நாசப்படுத்தியுள்ளது.

குட்டிகளுடன் ஒன்றாகவே சுற்றித்திரியும் 25 யானைகளையும், வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டி வருகின்றனர். அந்த யானைகள் ஓசூர்-தர்மபுரி நெடுஞ்சாலை சானமாவு கிராமத்தில் கூட்டமாக சாலையை கடந்து சென்றன. யானைகள் கடந்து செல்லும் வரை வாகனங்களை நிறுத்தி வைத்த வனத்துறையினர், அவை சாலையை கடந்த பின் அனுமதித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.