கரூர்: மழையுடன் சேர்ந்து விழுந்த எலிவால் புழுக்கள்.


கரூர் மாவட்டத்தில் மழை பெய்துகொண்டிருந்த போது திடீரென வீடுகள் மீது விழுந்த எலி வால் கொண்ட புழுக்களால் மக்கள் அச்சம் அடைந்தனர். இலாலாபேட்டையில் நேற்றிரவு கனமழை பெய்தபோது, சில புழுக்கள், வீட்டுக் கூரைகள், மாடிப் படிக்கட்டுகளில் விழுந்துள்ளன.
இதனை வினோதமான உயிரினம் என நினைத்த மக்கள், அதன் அருகே செல்ல அச்சமடைந்தனர். பின்னர் அவை எலி வால் கொண்ட புழுக்கள் என்று தெரிய வந்ததும் நிம்மதி அடைந்தனர். வாலுடன் சேர்த்து அதன் நீளம் 8 செண்டி மீட்டர் வரை இருந்ததாக அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர். இந்த வகை புழுக்களால் குடல் புண், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் உருவாகக் கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.