திமுக முன்னாள் எம்.எல்.ஏ. என்.பெரியசாமி காலமானார்.


தூத்துக்குடி தெற்கு திமுக மாவட்டசெயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.பெரியசாமி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. உடல் நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ., கீதாஜீவனின் தந்தை இவர் என்பது குறிப்படத்தக்கது. மறைந்த பெரியசாமியின் உடல், இன்று இரவு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி கொண்டு செல்லப்படும் எனத் தெரிகிறது.
'முரட்டு பக்தன்' என கருணாநிதியால் அழைக்கப்பட்டவர் என். பெரியசாமி. இவர் இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார்.
3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு:
என்.பெரியசாமி மறைவு தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், " தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் - சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான என்.பெரியசாமி இன்று (26-5-2017) காலை 7.00 மணியளவில் சென்னை, தனியார் மருத்துவமனையில் மறைவெய்தினார்.
அவரது மறைவினையொட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.