வங்கி கணினிகளில் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடைபெறக்கூடும் – வல்லுநர்கள்.


வைரஸ்களை பரப்பி கணிணியின் செயல்பாடுகளை முடக்கும் ரேன்சம்வேர் வன்னா கிரை ((ransomware wannacry)) நிரல், இந்திய வங்கிகளின் கணினிகள், மற்றும் ஏ.டி.எம்., எந்திரங்களை தாக்கக் கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ரேன்சம்வேர் நிரலை திறக்கும் போது கணினியின் தகவல்கள் முழுவதையும் இந்த நிரல் ஆக்கிரமிப்பு செய்வதோடு, 300 டாலர்கள் முதல் 600 டாலர்கள் வரை டிஜிட்டல் பணம் எனப்படும் பிட்காயின் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும். பணம் கொடுத்தால் மட்டுமே தகவல்கள் மீண்டும் விடுவிக்கப்படும். இந்த நிரல் மூலம் இதுவரை 150 நாடுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கணிணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து எச்சரித்துள்ள நிபுணர்கள், இந்த நிரலானது விண்டோஸ் கணினிகளை குறி வைத்து தாக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்திய வங்கிகளின் கணிணிகள், மற்றும் ஏ.டி.எம். எந்திரங்கள் ஆகியவற்றில் விண்டோஸ் பயன்படுத்தப்படுவதையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த எச்சரிக்கையை அடுத்து ஏ.டி.எம். எந்திரங்களில் விண்டோஸை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.