இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கும் உத்தரவுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு.


இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்தியஅரசு தடை விதித்திருப்பதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் உத்தரவானது, மதசுதந்திரம், தனிநபர் சுதந்திரம், மதச்சார்பற்ற தன்மை, அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகள் ஆகியவற்றைப் பறிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், ஜல்லிக்கட்டு முதல் மாட்டிறைச்சிக்கு தடை வரை மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் அடாவடி அரசியலை பா.ஜ.க. அரசு பின்பற்றி வருவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் முடிவு மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். மக்களின் உணவு உரிமையை மத்திய அரசு பறித்துவிட்டதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகையில் சரிபாதிக்கும் அதிகமானோர் மாட்டிறைச்சியை உண்ணும் பழக்கம் உடையவர்கள் என்றும், அவர்களின் உணவு உண்ணும் விருப்புரிமையைத் தடுப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.