தாயைக் கொலை செய்து ரத்தத்தில் ஸ்மைலி பொம்மையை வரைந்த காவல் ஆய்வாளரின் மகன்.


மும்பையில், தாயைக் கொலை செய்து அந்த ரத்தத்தில் ஸ்மைலி பொம்மையை வரைந்து முடிந்தால்பிடி என எழுதி சவால் விட்டு தலைமறைவான மகனை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஷீனாபோரா கொலை வழக்கை முதலில் விசாரித்த காவல் ஆய்வாளர் தியானேஸ்வர் கனோர் மனைவி தீபாளி சான்டாகுரூஸ் பகுதியில் உள்ள வீட்டில் ரத்து வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். சடலத்துக்கு அருகே, ரத்தத்தில் ஸ்மைலி பொம்மையை வரைந்து, “அவளால் சோர்ந்துவிட்டேன், முடிந்தால் பிடித்து, தூக்கில் போடு” என எழுதப்பட்டிருந்தது. நள்ளிரவில் வீடு திரும்பிய காவலர் தியானேஸ்வர், மனைவி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தார். முந்தைய நாள் மாலைமுதல் மாயமான தமது மகன் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என காவலர் தியானேஸ்வர் சந்தேகித்தார்.
இந்நிலையில், கொலையாளி குறித்து விசாரணையை முன்னெடுத்த போலீசார், படிப்பை பாதியில் நிறுத்தி அடிக்கடி தாயிடம் பணம் கேட்டு மிரட்டும், மகன் சித்தாந்தே, பணம்தராத ஆத்திரத்தில் தாயைக் கொன்றிருக்கக் கூடும் என சந்தேகித்து, அவரைத் தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.