குழந்தைகளை தத்தெடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு.


குழந்தைகளை தத்தெடுப்பதற்கான கட்டணத்தை ரூ.15 ஆயிரம் வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அதிகார மையம் கட்டண உயர்வு குறித்த பரிசீலனையை அரசுக்கு அனுப்பியுள்ளது.
மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரிலேயே இந்த கட்டண உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விரைவில் கட்டண உயர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வுக்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கினால், கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டதாக இருக்கும்.
தற்போதைய நடைமுறைப்படி ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புவோர் 3 தவணைகளாக (நீதிமன்ற நடைமுறை கட்டணம் அல்லாது) ரூ.40ஆயிரம் வரை கட்டணமாக செலுத்த வேண்டும்.
புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் கூடுதலாக 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்தி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டிய நிலை உருவாகும்.
இந்த நடைமுறைக்கு குழந்தைகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நல்மனதோடு குழந்தைகளை தத்தெடுக்க வருவோர் பலர் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால், குழந்தைகளை தத்தெடுக்க தயங்குவார்கள் என்று கூறுகிறார் குழந்தை தத்தெடுப்பிற்கான இந்திய மையம் அமைப்பைச் சேர்ந்த நிஷாங்க்.
இது போன்ற கட்டண உயர்வும், நடைமுறைகளில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்களும் குழந்தை தத்தெடுப்பு முறையில் ஊழல் பெருக வழி வகுக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.