சென்னை ஐஐடி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு.


சென்னை ஐஐடி வளாகத்தின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மயிலாப்பூர் துணைஆணையர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.



மிருகவதை தடைச்சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சென்னை ஐஐடியில் முற்போக்கு மாணவர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் மாட்டுஇறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினர்.
மாட்டு இறைச்சித் திருவிழா நடத்திய சூரஜ் என்ற மாணவர் மீது வேறு சில மாணவர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த சூரஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்த ஐஐடி முன் திரள முயற்சிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஐஐடி வளாகத்தின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.