சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்டு பெண் உயிரிழக்க காரணமான இரண்டு பேர் கைது.


சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்டு பெண் உயிரிழக்க காரணமான இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் இருந்து, நேற்று இரவு சுமார் 11மணி முதல் 12 மணிக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில் மெரீனா கடற்கரை நோக்கி சிலர் பைக்ரேசில் ஈடுபட்டனர். ராதாகிருஷ்ணன் சாலையில் அசுரவேகத்தில் சென்ற அவர்கள் அந்த நேரத்தில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த மீனா, யசோதா என்ற இரு பெண்கள் மீது படுவேகமாக மோதினர்.
இதனால் தூக்கி வீசப்பட்ட பெண்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். பெண்கள் இருவரும் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மீனா என்பவர் உயிரிழந்தார். யசோதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பைக்ரேசில் ஈடபட்டு பெண்கள் மீது இருசக்கர வாகனத்தைக் கொண்டு மோதிய இஸ்மாயில் என்பவர் உள்ளிட்ட இருவரை சுற்றிவளைத்துப் பிடித்த பொதுமக்கள், அவர்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அடையாறு போக்குவரத்து போலீசார், இஸ்மாயில் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர். சென்னையில் அவ்வப்போது இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் குடிபோதையில் பைக்ரேசில் ஈடுபடுவதும், அவர்களால் விபத்தில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் வழக்கமாகி வருகிறது. பைக்ரேசில் ஈடுபட்டு உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. கொலை வழக்கு பதிவு செய்தால் தான் மற்றவர்கள் பைக்ரேசில் ஈடுபட தயங்குவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.