சென்னையில் சொத்து தகராறில் 2 பெண்கள் மீது தீ வைத்த கும்பல்.


யானைக்கவுனி – ஜட்காபுரத்தைச் சேர்ந்த நவநீதம், தனது அக்கா மகள் சசிகலாவுடன் தனக்கு சொந்தமான குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.
அந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடி, தலைமைச் செயலக ஊழியர் சுதர்சன், ஜோசப், சாந்தி, பிரியா ஆகியோர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு நவநீதம், சசிகலா ஆகியோர் வீட்டுக்குள் இருந்தபோது, சுதர்சன் தரப்பினர் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர். அவர்களை மிரட்டுவதற்காக பெண்கள் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டுள்ளனர். ஆனால், இதை பயன்படுத்திக் கொண்டு, சுதர்சன் தலைமையிலான கும்பல், தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தீப்பற்றி உடல் கருகிய 2 பெண்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து நவநீதத்தின் உறவினர் வளர்மதி அளித்த புகாரின்பேரில், சுதர்சன் உள்ளிட்ட 4 பேரையும், யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்புதிவு செய்தனர்.
இதனிடையே, தலைமைச் செயலக காலனி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கோமளவள்ளியின் தூண்டுதலின்பேரிலேயே, இந்த தீவைப்பு சம்பவம் அரங்கேறியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், கோமளவள்ளி மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.