தனியார் பாலில் கலப்படம் குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை?- ஸ்டாலின் கேள்வி.


தனியார் பாலில் கலப்படம் நடப்பது உண்மையென்றால் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்களில் பாலில் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறுகிறார், அப்படிசெய்தால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பு அவருடையது, பாலில் கலப்படம் உள்ளது என்றால் ஏன் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.
எனவே பால் கலப்படம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். மாடுகள் விற்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து ஏற்கனவே விரிவான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டது போல் மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏழை எளிய விவசாய மக்களை பெரிதும் பாதிக்கும். நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு அது ஊறுவிளைவிக்கும்” என்றார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.