ஒரே நாளில் 5 பெண்களிடம் இருந்து 40 சவரன் நகைகள் அபேஸ் செய்த பலே திருடர்கள்.


சென்னையில், போலீஸ் போல நடித்து கொள்ளையர்கள், 5 பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலிகளை பாதுகாப்பதாக கூறி அபேஸ் செய்துச்சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மந்தைவெளியை சேர்ந்த சுகந்தா என்ற 66 வயது மூதாட்டி தனியாக நடந்து சென்ற போது அவரை 3 பேர் மறித்துள்ளனர். அவர்கள் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கொள்ளையர் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், நகையை கழற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் கூறிவிட்டு, அந்தப் பெண் அணிந்திருந்த 10 சவரன் நகையுடன் மாயமாகி உள்ளனர்.
இதே போல முகப்பேரை சேர்ந்த கிருஷ்ணகுமாரியிடம் கிண்டியில் வைத்து 10 சவரன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் அபேஸ் செய்துள்ளனர். அடையாறைச் சேர்ந்த லட்சுமியிடம் 3 சவரன், தேனாம்பேட்டை கோமதியிடம்10 சவரன், என ஒரே நாளில் 40 சவரன் நகைகளை போலீஸ் போல நடித்து கொள்ளையர்கள் களவாடிச்சென்றுள்ளதால் தனியாக செல்லும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க சென்னை பெருநகர காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த புகைபடத்தில் உள்ளவர்கள் தான் காவல்துறையினர் வேடமணிந்து சென்னையில் தொடர் கைவரிசையில் ஈடுபட்டுவரும் ஈரானிய கொள்ளையர்கள் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர் இந்த நபர்களை பார்த்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ காவல் கட்டுப்பாட்டறைக்கோ தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். தனியாக வெளியே செல்லும் வயதான பெண்கள் அதிக அளவு தங்கசங்கிலிகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வெளியில் தெரியாதபடி சேலைக்குள் தங்க சங்கிலிகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறது காவல்துறை.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.