சி.பி.எஸ்.இ. கருணை மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கூடாது – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.


சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கும் முறையை நடப்பாண்டில் ரத்து செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வில் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் முறையை ரத்து செய்வதாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்தது.
இதற்கு மாநில அளவில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், சி.பி.எஸ்.இ.யின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கருணை மதிப்பெண் முறையை ரத்து செய்திருப்பது நியாயமற்ற, பொறுப்பற்ற நடவடிக்கை என கண்டனம் தெரிவித்தனர். இந்த முடிவு நடப்பாண்டே நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பழையை முறையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.