ஹைதராபாத்: ஜாதிவெறியில் மகளின் கணவரை கொலை செய்த அப்பா.


தன் மகள் தங்களைவிட குறைந்த ஜாதி பையனை திருமணம் செய்து கொண்டாள் என்பதற்கான சொந்த மருமகனை  மாமனாரே கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.
ஹைதரபாத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் அம்போஜி நரேஷ். இவர் தன்னைவிட உயர்ஜாதி பெண்ணான தும்மாலா ஸ்வாதி(20) என்பவரை விரும்பி திருமணம் செய்து கொண்டு மும்பையில் தங்கள் இல்லற வாழ்க்கையை தொடங்கினர். இந்த திருமணத்தில் ஸ்வாதியின் தந்தைக்கு சிறிதும் உடன்பாடில்லை. இருப்பினும் உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் எனக்கூறி ஸ்வாதியின் அப்பா ஸ்ரீனிவாசரெட்டி, அவர்களை ஹைதராபாத் வரவழைத்துள்ளார்.
இந்நிலையில் அம்போஜி நரேஷை ஒரு மாத காலமாக காணவில்லை. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாமனாரே தனது மருமகனை கொலை  செய்தது தெரியவந்துள்ளது. தன் மகள் தங்களை விட குறைந்த ஜாதி இளைஞரை, தன் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதால், அம்போஜி நரேஷை என் உறவினர்கள் உதவியுடன் நான்தான் கொன்றேன் என போலீசாரிடம் ஸ்ரீனிவாசரெட்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.