குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 350க்கும் மேற்பட்ட மினரல்வாட்டர் நிறுவனங்கள் மூலம் சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் குடிநீர்கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி, நிலத்தடி நீர் மட்டம் குறைவதை காரணம் காட்டி மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடும் அதிகாரிகளின் உத்தரவு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை முதல் அந்த நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வேலைநிறுத்தம் காரணமாக குடிநீர் கேன்களின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது.
சில இடங்களில் அதிக ரூபாய்க்கு தண்ணீர் கேன் விற்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் குடிநீர் கேன் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.