சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.


புதுச்சேரி திட்டக்குழுக் கூட்டம் கடந்த வாரம் ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது. அதில் 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட ஒதுக்கீடாக ரூ.6945 கோடிக்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.
இதில் திட்டச் செலவினங்களுக்காக ரூ.4,445 கோடி, திட்டமில்லாச் செலவுக்காக ரூ.2,500 கோடி என மொத்தம் ரூ.6,945 கோடிக்கு திட்ட வரையறை இறுதி செய்யப்பட்டு மத்திய உள்துறை அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் 25-ல் பட்ஜெட் தாக்கலாக உள்ளது.
மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்காததால் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதுபோல் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் கூட்டப்படும் குளிர்கால கூட்டத்தொடரும் கடந்த ஜனவரி மாதம்தான் கூட்டப்பட்டது.
அப்போது ஆளுநர் கிரண்பேடி சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டும் என்று விரும்பினார். அதற்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்புத் தரவில்லை.
கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூட்டப்பட்டது. ஆப்போது ஆளுநர் உரையில்லை. முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதுதான் ஆளுநர் உரையாற்றி தொடங்கி வைப்பார் என்று ஆட்சியாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் வரும் 25-ம் தேதி 2017-18ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி இன்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
பேரவைக்கு காலை வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம் வரவேற்றார். அதையடுத்து கிரண்பேடி போலீஸார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிரண்பேடி பேரவைக்கு வந்து உரையாற்ற தொடங்கினார்.
கறுப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்:
அப்போது, கறுப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசானா ஆகியோர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு கோஷங்கள் எழுதப்பட்ட போஸ்டர்களை தூக்கி பிடித்தபடி ஆளுநரை நோக்கி முன்னேறினர். பின்னர் வெளிநடப்பு செய்தனர். அப்போது கண்களிலும் கறுப்பு துணி கட்டி கொண்டனர்.
வெளிநடப்புக்குப் பின்னர் சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் கூறுகையில், "மலிவு விளம்பரம் தேடும் முயற்சியில் ஆளுநர் கிரண்பேடி ஈடுபடுகிறார். மத்திய - மாநில வளர்ச்சிக்கு பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர் மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை. தொடர் மோதல் போக்கில் உள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார். டெல்லியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆளுநர் கிரண்பேடிக்கு பேரவையில் உரையாற்றும் உரிமை கிடையாது.
துணைநிலை ஆளுநர் மீது குற்றம் சுமத்தி வந்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதாக இரட்டை வேடம் போடுகிறார். இவற்றை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்" என்று குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.