பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரிப்பு.


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால், அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை எட்டு மணி நிலவரப்படி, நீர்மட்டம் 40 புள்ளி இரண்டு இரண்டு அடியாகவும். நீர் இருப்பு 2 புள்ளி 4 டி.எம்.சி.யாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 478 கனஅடியாகவும் இருந்தது. இந்நிலையில், மதியம் ஒரு மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, அணையின் நீர்மட்டம் 40 புள்ளி 5 அடியாகவும், நீர் இருப்பு 2 புள்ளி 5 டி.எம்.சி.யாகவும் உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 150 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.