50 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீன் கோரி வைகோ மனு தாக்கல்.


தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 50 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தேசத் துரோக வழக்கு
2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி வைகோ மீது தேசத்துரோக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதி, எழும்பூர் நீதிமன்றத்தில் வந்தபோது வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையேல் தன்னை கைது செய்ய வேண்டும் என்று தானாக முன்வந்து வைகோ மனு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் வைகோவுக்கு ஜாமீன் வழங்க முன் வந்தார். ஆனால் ஜாமீன் பெற மறுத்த வைகோ சிறைக்குச் சென்றார். தொடர்ச்சியாக வந்த இரண்டு விசாரணைகளிலும் ஜாமீன் பெற மறுத்து வைகோ கடந்த 50 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
50 நாட்களுக்கு பிறகு ஜாமீன் கோரிக்கை
இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வைகோ தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள பிணாங்கு துணை முதல்வர் ராமசாமியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்கு மலேசியா செல்ல வேண்டி இருப்பதால் வைகோ ஜாமீன் கோரி இருக்கலாம் என்று மதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.