நாய்க்கு பிரியாணி கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை.


சென்னையில் நாய்க்கு பிரியாணி கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய், அப்பகுதியில் வசிக்கும் வெள்ளையன் என்ற கூலித்தொழிலாளியின் நாய்க்கு தினமும் உணவு வழங்கி வந்துள்ளார்.
வழக்கம்போல் புதன்கிழமை இரவு விஜய், அந்த நாய்க்கு பிரியாணி கொடுத்துள்ளார். தனது நாய்க்கு சைவம் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கூறி விஜய்யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வெள்ளையன், ஒரு கட்டத்தில் விஜய்-யின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
தகவல் அறிந்து வந்த ஐசிஎஃப் மற்றும் ஓட்டேரி போலீசார், இந்த பகுதி தங்கள் எல்லையில் வராது என்று கூறி வழக்கு பதிவு செய்யாமல் நேரம் கடத்தியதாக கூறப்படுகிறது. வெகு நேரத்திற்குப் பிறகே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விஜய் சேர்க்கப்பட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் தங்களுக்குள் எல்லை பிரிப்பதில் சண்டையிட்டுக்கொண்டு காலதாமதம் செய்ததாலேயே விஜய் உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம்சாட்டினர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.