விருத்தாசலம் கோயிலில் திருடுபோன அம்மன் சிலை 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 15 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு நேற்று நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்தபிறகு அர்த்தநாரீஸ்வரர், ப்ரத்தியங்கராதேவி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, விநாயகர்சிலை என 6 கற்சிலைகள் திடீரென மாயமாயின.
இந்நிலையில், 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சர்வதேச சிலை கடத்தலில் தொடர்புடைய சுபாஷ் சந்திர கபூர், மேற்கண்ட சிலைகளை கடத்தி ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்தில் விற்றது தெரியவந்தது.
அர்த்தநாரீஸ்வரர் சிலை மீட்பு
இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன் அர்த்தநாரீஸ்வரர் சிலை மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டது. அதேபோன்று தற்போது மீட்கப்பட்ட ப்ரத்தியங்கராதேவி சிலையும் நேற்று விருத்தாசலம் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிலையை பார்வையிட்ட நீதித்துறை நடுவர் ஜெயக்குமார், கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில் உள்ள பாதுகாப்பு மையத்துக்கு சிலையை கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
ரூ.1.49 கோடிக்கு விற்பனை
இதுதொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ் கூறும்போது, ‘கும்பாபிஷேகத்துக்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களை வெளியே கொண்டு சென்றபோது கடத்தப்பட்ட இந்த சிலை, ஆஸ்திரேலியா தேசிய அருங்காட்சியகத்துக்கு ரூ.1.49 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்புப்பிரிவினர், சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்திடம் கொடுத்தனர். இதன் அடிப்படையில் தற்போது ப்ரத்தியங்கராதேவி சிலையை இந்தியாவிடம் ஆஸ்திரேலியா அரசு ஒப்படைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.