திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்தில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, அரிசி ஆலை மீது மின்னல் தாக்கி கட்டடம் இடிந்து விழுந்ததில், 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், நாயுடுமங்கலம், செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து. ஒரு சில இடங்களில், பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்யது. சாலையோர மரங்கள் முறிந்து விழுந்தன.
இந்நிலையில், தளவநாயக்கன்பேட்டை கிராமத்தில் உள்ள நவீன அரிசி ஆலை ஒன்றில், வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அரிசி ஆலையின் புகைகூண்டின் மீது மின்னல் தாக்கியது. இதனால், புகைக்கூண்டு சரிந்து தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த கட்டடத்தின் மீது விழுந்ததில், 6 பெண்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதே போன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள களத்தூர் கிராமத்தில், மின்னல் தாக்கியதில், விளையாடிக் கொண்டிருந்த 6 சிறுவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர்களில், மணிகண்டன் மற்றும் திருஞானவேல் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற நால்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.