பவுடரில் புற்றுநோய் புகார்: மூதாட்டிக்கு ரூ.700 கோடி இழப்பீடு.


ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ் பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த மூதாட்டிக்கு அந்த நிறுவனம் 110மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாயாகும். விர்ஜீனியாவை சேர்ந்த 62 வயதான ஸ்லெம்ப் என்ற மூதாட்டிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டது. சுமார் 40 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ் பவுடரை தான் பயன்படுத்தியதே புற்றுநோய் ஏற்பட காரணம் என கூறி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ் நிறுவனம் 110 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்த மூதாட்டிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த நிலையில் மேல்முறையீடு செய்து புற்றுநோய் ஏற்பட்டதற்கும் தங்கள் நிறுவன பவுடருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்க போவதாக ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2000 பெண்கள் இந்த பவுடரால் உடல் நல கேடு ஏற்படுவதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.