குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம்.


காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 14-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பாக அந்தப் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆளும் பா.ஜ.க. நிறுத்தும் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து, டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வெள்ளியன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் அழைப்பின்பேரில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி, தி.மு.க. எம்.பி. கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா உள்ளிட்ட 17 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
அனைவரும் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சார்பில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ஷரத் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற பொது வேட்பாளரை நிறுத்த ஒருமித்த கருத்தோடு முடிவு செய்யப்பட்டது. மேலும், நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.