பாகுபலி 2 திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனை.


கடந்த 28ந் தேதி பாகுபலி 2 திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. வெளியான தினத்திலேயே 121 கோடி ரூபாய் வசூல் செய்து பாகுபலி 2 இந்திய திரையுலகில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தது. பாகுபலி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்றை பெற்றதால் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக உலகம் முழுவதும் ஓடி வருகிறது. ஒன்பதாயிரம் திரையரங்குகளில் பாகுபலி 2 வெளியான நிலையில், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு காரணமாக கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டன. இதனால் ஒன்பதே நாட்களில் பாகுபலி 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள பாகுபலி வெளிநாடுகளில் 200 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை ஈட்டியுள்ளது.
இந்திய சினிமாவை பொறுத்தவரை இந்தி திரைப்படங்கள் மட்டுமே 500 கோடி ரூபாய் வசூலை இதுவரை கடந்துள்ளது. அமீர்கான் நடிப்பில் வெளியான பி.கே. திரைப்படம் தான் சுமார் 792 கோடி ரூபாய் வசூல் செய்து இந்திய அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது பாகுபலி 2 திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து, உலக அளவில் இந்திய திரைப்படங்களுக்கு இருக்கும் சந்தை மதிப்பின் உண்மையான அளவை தெரியப்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.