தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண்மை அதிகாரி பணி.


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உதவி வேளாண்மை அதிகாரி (Assistant Agricultural Officer) பதவியில் 206 காலியிடங்களை நேரடி நியமனமுறையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. மொத்தக் காலியிடங்களில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேவையான தகுதி
பிளஸ் 2 முடித்துவிட்டு விவசாயம் அல்லது தோட்டக் கலை பாடத்தில் டிப்ளமா பட்டம் பெற்றிருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பி.சி., பி.சி. (முஸ்லிம்) எம்.பி.சி. வகுப்பினருக்கும், கணவரை இழந்த பெண்களுக்கும் (பொதுப் பிரிவு) வயது வரம்பு ஏதும் கிடையாது.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் (அப்ஜெக்டிவ் முறை) 2 தாள்கள் இருக்கும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் (வேளாண்மை, தோட்டக் கலை) 150 கேள்விகளும், 2-வது தாளில் பொது அறிவு பகுதியில் (பிளஸ் 2 தரத்தில்) 50 கேள்விகளும் இடம்பெறும்.
முதல் தாள்களுக்கு 150 மதிப்பெண். 2-வது தாளுக்கு 50 மதிப்பெண். எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடைபெறும். இதற்கு 50 மதிப்பெண். எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி பணி நியமனம் நடைபெறும்.
தகுதி உடையவர்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.tnau.ac.in) பயன்படுத்தி மே மாதம் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைத் தேர்வுக் கட்டணத்துக்கான (ரூ.750. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ.500) டிமாண்ட் டிராப்ட்டுடன் மே 22-க்குள் வேளாண் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை வேளாண் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம். உதவி வேளாண்மை அதிகாரி பணிக்கு ஆரம்ப நிலையில் ரூ.20 ஆயிரம் அளவுக்குச் சம்பளம் கிடைக்கும்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.