புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: 9500 புள்ளிகளுக்கு மேலே நிப்டி.


இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டன. கடந்த இரு மாதங்களில் ஒரேநாளில் அதிக ஏற்றம் இருந்தது நேற்றுதான். அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்துவதற்கான சாத்தியங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டதால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன.
சென்செக்ஸ் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை நேற்றைய வர்த்தகத்தின் இடையே தொட்டது. அதிகபட்சமாக 30793 புள்ளியை தொட்டது. இதற்கு முன்பு 30712 புள்ளிகள் (மே 19) வரை சென்றது தான் அதிகம். வர்த்தகத்தின் இடையே 448 புள்ளிகள் உயர்ந்து 30750 புள்ளியில் முடிவடைந்தது. கடந்த மே மாதம் 17-ம் தேதி 30658 புள்ளியில் முடிவடைந்ததே இதற்கு முந்தைய அதிகபட்சமாகும்.
நேற்றைய வர்த்தகத்தில் நிப்டி அதிகபட்சமாக 9523 புள்ளியை தொட்டது. வர்த்தகத்தின் இடையே 149 புள்ளிகள் உயர்ந்து 9509 புள்ளியில் நிப்டி முடிவடைந்தது.
காரணங்கள் என்ன?
அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்துவது குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக அறிவித்ததால் சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் ஏற்றம் இருந்தது. தவிர நேற்று மே மாத டெரிவேட்டிவ் பிரிவு வர்த்தகம் முடிவுற்றது. வர்த்தகர்கள் அதிக ஷார்ட் கவர் செய்ததும் பங்குச்சந்தையில் ஏற்றதுக்கு காரணமாகும். தவிர இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தைக்கு தொடர்ந்து அந்நிய மற்றும் இந்திய நிறுவனங்களின் முதலீடு வந்துகொண்டிருப்பதும் ஒரு காரணமாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் எல்அண்ட்டி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ், கெயில், டிசிஎஸ், எஸ்பிஐ, எம் அண்ட் எம், விப்ரோ, மாருதி மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. 100-க்கும் மேற்பட்ட பங்குகள் நேற்று 52 வார உச்சத்தை தொட்டன. மாருதி சுசூகி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, வொல்டாஸ் உள்ளிட்ட பல பங்குகள் 52 வார உச்சத்தை தொட்டன.
அதே சமயத்தில் லூபின் பங்கு 7.31 சதவீதம் சரிந்தது. இதனால் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.5,000 கோடிக்கும் மேல் சரிந்தது. தவிர நிப்டி பார்மா குறியீடும் 2.67 சதவீதம் சரிந்து முடிந்தது.
மிட்கேப் குறியீடு 1.31 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 2.01 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. தவிர வங்கி குறியீடு, கேபிடல் குட்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் குறியீடு ஆகியவை உயர்ந்தன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.