செய்தியாளர்களை அவதூறாகப் பேசியதாக வழக்கு – பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரிய நடிகர்கள் மனு தள்ளுபடி.


நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்தியராஜ் உள்ளிட்ட 8 நடிகர்கள், தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரிய மனுவை, உதகை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே, உதகை நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2009-ம் ஆண்டு நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பங்கேற்று பேசிய  நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், சேரன், அருண்விஜய், விவேக், விஜயகுமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் செய்தியாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் இழிவாக பேசியதாக, உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நடிகர்கள் 8 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக, 23-ம் தேதி ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உதகை குற்றவியல் நடுவர்மன்றநீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி, நடிகர்கள் சார்பில் உதகை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஸ்வநாத் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உதகை குற்றவியல் நீதிமன்றம், நடிகர்கள் 8 பேரும் ஜூன் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
நடிகர்கள் 8 பேரும் ஜூ இதனிடையே, தங்கள் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி, நடிகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி விமலா, அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் 2011-ம் ஆண்டு நடிகர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளபோது, பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி, உதகை நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.