எஸ்.பி.ஐ. வங்கியிடம் ரூ.65 கோடி மோசடி என்று புகார்.


எஸ்.பி.ஐ. வங்கியிடம் 65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு தொடர்பாக தங்க நகை வியாபாரிகள் 4 பேருக்கு சொந்தமாக சென்னை, கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
2013ஆம் ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கியின் கோவை கிளை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தங்களிடம் கடந்த 2012ஆம் ஆண்டு தங்க நகை வியாபாரிகள் என்று கூறிய 4 பேர், 60 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவற்றை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாகவும் புகார் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்யுமாறு கடந்த 2016ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு சொந்தமாக சென்னை, கோவையில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஹார்ட் டிஸ்க், லேப்டாப்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.