மணலுக்குள் பதுக்கிவைத்திருந்த 62 சாராயக்கேன்களை பொதுமக்களே தோண்டியெடுத்துக் கைப்பற்றினர்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாராயவியாபாரிகள் மணலுக்குள் பதுக்கிவைத்திருந்த 62 சாராயக்கேன்களை பொதுமக்களே தோண்டியெடுத்துக் கைப்பற்றினர்.
மரக்காணத்தில் உள்ள கரிப்பாளையம் பகுதியில் லோகு, முரளி, கோபால், அர்ச்சுனன் உள்ளிட்ட 16 பேர் சாராயவியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள். இந்நிலையில் இன்று கரிப்பாளையத்தை ஒட்டிய வனப்பகுதியில் மணலுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தலா 35 லிட்டர் அளவுள்ள 62 சாராயக்கேன்களை பொதுமக்கள் தோண்டியெடுத்துக் கைப்பற்றினர்.
கைப்பற்றிய சாராயக்கேன்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க பொதுமக்கள் கொண்டு சென்றபோது அவர்களை வழிமறித்த போலீசார் சாராயக்கேன்களை ஒப்படைத்துவிடுமாறும் தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி போலீசார் பிடுங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில் பொதுமக்களிடம் இருந்து சாராயக்கேன்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றிச் சென்றனர். இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தப்போவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்போவதாகவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.