35 மடங்கு விலை வைத்து கொள்ளை லாபத்திற்க்கு மணல் விற்பனை.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் கடந்த 1994-ம் ஆண்டு முதல் மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அந்தந்த பஞ்சாயத்து அமைப்புகள் வழங்கி வந்த அனுமதி
1999-ம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சிதலைவர்களுக்கு மாற்றப்பட்ட பின் மணல் அள்ளுவதில் ஏராளமான முறைகேடுகள் நடக்கத் தொடங்கின.
2003 முதல் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த தொடங்கிய பின்னரும் மணல் குவாரி முறைகேடுகள் தொடர்வதாகவே குற்றஞ்சாடப்படுகின்றது. இதற்கிடையே காவிரி, தாமிரபரணி,கொள்ளிடம், பாலாறு, தெண்பெண்ணை என ஏராளமான இடங்களில் செயல்பட்ட மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் அதளபாதாளத்துக்கு சென்று விட்டது. இன்னும் பலஊர்கள் வானம் பார்த்த பூமியாகிவிட்டது. இதையடுத்து அரசு மணல்குவாரிகள் பல நீதிமன்ற உத்தரவுகளால் மூடப்பட்டது. சியா என்ற அமைப்பின் அனுமதி கிடைக்கப்பெறாத காரணத்தால் பல மணல் குவாரிகளில் மணல் அள்ளதடை உள்ளது. தற்போது தமிழகத்தில் 4 இடங்களில் மட்டுமே மணல் குவாரிகள் செயல்பட்டுவருவதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

திருச்சியில் மட்டும் கொண்டையாம்பட்டி, திருவாச்சி, லால்குடி, உள்ளிட்ட 3 இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரிலும் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் திருட்டுத்தனமாக மணல் கொள்ளை நடக்கிறது.
அரசு மணல் குவாரிகளில் 2 யூனிட் மணல் 1100 ரூபாய்க்கும், 3 யூனிட் மணல் 1575 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக கூறப்படுகின்றது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் டிடி எடுத்து கொடுத்து மணல் ஏற்றி வரும் லாரி உரிமையாளர்கள் அதனை சென்னைக்கு கொண்டுவந்து 50 ஆயிரம் ரூபாய் வரை விலைவைத்து விற்கின்றனர். 35 மடங்கு அதிக விலைவைத்து விற்பதால் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
அப்படியே பணம் கொடுக்க ஆள் இருந்தாலும் தற்போது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூரில் எளிதாக மணல் கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் கட்டுமான நிறுவனத்தினர். இதனால் கட்டுமான செலவுகள் தாறுமாறாக உயர்வதாகவும், மணல் கிடைக்காமல் பெரும்பாலான கட்டிடங்களின் கட்டுமாணப்பணி பாதியிலேயே நிறுத்திவைத்துள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மணல் அள்ளும் இடத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் லாரிகளுக்கே முன்னுரிமை அளித்து மணல் வழங்கப்படுவதாகவும், வெளியூரில் இருந்துவரும் லாரிகளை 20 நாட்கள் வரை கத்திருக்கவைத்த பின்னர் தான் மணல் கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது. 2 யூனிட் மணலுக்கு டிடி கொடுத்து பில் பெற்றுக்கொண்டு லாரிகளில் சட்டவிரோதமாக 3 யூனிட் மணல் ஏற்றப்படுவதாகவும், பில் இல்லாத அந்த 1 யூனிட் மணலுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தனியாக சென்று விடுவதாக கூறப்படுகின்றது.
இதனால் அளவுக்கதிகமாக மணல் ஏற்றிவரும் மணல் லாரி உரிமையாளர்களோ தங்கள் லாரிகளை செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரியில் நிறுத்திவைத்துக் கொண்டு 2 யூனிட் மணல் என்றால் 35 ஆயிரம் என்றும், 3 யூனிட் மணல் என்றால் 50 ஆயிரம் வரையும் பேரம் பேசி விற்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதில் ஒரு யூனிட் மணல் கூடுதலாக இருக்கும் என்று கூறியே விலைவைக்கின்றனர். மேலும் லாரி மணலை விலைக்கு வாங்கிய கட்டிட உரிமையாளரிடம் இருந்து சென்னை காவல்துறையினருக்கு கொடுக்கவேண்டும் என்று தனியாக 1500 ரூபாயை கூடுதலாக பெற்றுக்கொள்வதாக கூறப்படுகின்றது.
விலை உயர்வுக்கு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கதலைவர் முனிரத்தினம் அளித்த விளக்கம் அதிரவைப்பதாக இருந்தது. 
தமிழகத்தின் ஆறுகளில் மணல் அள்ளி.. விவசாய நிலங்களை மலடாக்கி.. அரசுக்கு கிடைப்பதோ 3 யூனிட்டு மணலுக்கு வெறும்1575 ரூபாய் ..! ஆனால் அரசுக்கு சேரவேண்டிய லட்சகணகான ரூபாய் வருவாய் யார் யாருக்கோ சட்டவிரோதமாக செல்கிறது எனவே இருக்கின்ற மணல்குவாரிகளையும் முழுவதுமாக மூடிவிட்டு ஏற்கனவே அறிவித்தபடி எம்.சாண்ட் எனப்படும் மணல் விற்பனையை அரசே முறைப்படுத்தி கட்டுமானதுறையினரை மட்டுமல்லாமல் நம் மண்ணையும், மக்களையும் காக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.