2 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்காததைக் கண்டித்து சாலை மறியல்.


சேலம் மாவட்டத்தில் 24 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அதில் சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. தேர்வெழுதும் மாணவர்கள் 9.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒசூரைச் சேர்ந்த பார்கவி, ஓமலூரைச் சேர்ந்த இன்பரசன், தர்மபுரியைச் சேர்ந்த நிசாந்தி ஆகியோருக்கு சேலம் மூனுரோடு பகுதியில் உள்ள வித்யாமந்திர் பள்ளிக்கு தேர்வு எழுத காலை 9.32 மணிக்கு வந்தனர். அவர்களை தாமதமாக வந்ததாகக் கூறி தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சேலத்தில் 3 வித்யா மந்திர் பள்ளிகள் உள்ளதால் எந்த மையம் என்று தேடிப்பிடித்து வர 2 நிமிடங்கள் தாமதமானதாக மாணவர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால் அதனை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் மாணவர்கள் மூன்று பேரையும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கக் கோரி பெற்றோர்கள் பள்ளி முன்பு சாலை மறியில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.