புதுச்சேரி: 2017-2018-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் -அதிமுக அம்மா என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு.


புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எந்தவித புதிய அறிவிப்புகளும் இல்லை எனக்கூறி, அதிமுக அம்மா மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. புதுச்சேரி சட்டப்பேரவையில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 6 ஆயிரத்து 945 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாரயணசாமி தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ’புதுச்சேரி மக்களை ஏமாற்றாதே’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அதிமுக அம்மாஅணி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்.
எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், அன்பழகன் தலைமையில் அதிமுக அம்மாஅணி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.