2015 – 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு 403 கோடி ரூபாய் இழப்பீடு.


விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு இழப்பீட்டு தொகை 403 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கி கணிக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2015-16 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீடு செய்து, மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட, 2 லட்சத்து 96 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 403 கோடியே 79 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டு, மாநிலஅரசின் பங்காக 168 கோடியே 66 லட்சம் நிதியை இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்திற்கு தமிழக அரசு விடுவித்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, செவ்வாயன்று 22 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 96 ஆயிரத்து 550 விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையாக 403 கோடியே 79 லட்சத்தை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் விடுவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகை இன்னும் ஓரிருநாட்களில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.