ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை, ரூ.1 லட்சம் கொள்ளை.


சென்னையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் இருந்து 30 சவரன் தங்கநகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள முருகப்பா நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான இவர், சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்றபோது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்கநகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரெக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வேப்பேரி காவல்நிலையத்தில் ஜெயச்சந்திரன் புகார் அளித்தார். இதனையடுத்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்ற வேப்பேரி போலீசார், கொள்ளைபோன வீட்டிற்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.