ரூ.1 கோடி பழைய ரூபாய் நோட்டுகளுடன் 4 பேர் கைது.


குஜராத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரத்தின் சீதால் சவுக் பகுதியில் இருந்து வந்த ஒரு காரை பரூச் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று சோதனை செய்தனர். காருக்குள் 11,322 பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் இருந்ததை அடுத்து, காரில் வந்த நான்கு பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
“கமிஷன்” அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தருவதற்காக அவர்கள் கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. ஆனால், யார் இந்தப் பணத்தைக் கொடுத்து அனுப்பினார்கள் என்ற விவரத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சதுர்சிங் சோதா, டெனிஸ் கங்கானி மற்றும் சூரத்தைச் சேர்ந்த வைரல் ரான்பரியா, கிமான்சூ மெக்தானி ஆகிய 4 பேரைக் கைது செய்து, அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.