வன்முறை பரவுவதை தடுக்க காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமல்.


ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சப்சார்பட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை பரவுவதை தடுக்கும் வகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டிவந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானியை கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதனால் அம்மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இதனால் பலமாதம் வரை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

இதைத் தொடர்ந்து புதிய தளபதியாக சப்சார்பட் நியமிக்கப்பட்டார். இவர் தெற்கு காஷ்மீரின் சொய்மோ கிராமத்தில் பதுங்கி இருந்ததாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் சப்சார்பட்டையும் நேற்று சுட்டுக் கொன்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தெற்கு காஷ்மீரின் புல்வாமா, அனந்த்நாக், பாரமுல்லா உள்ளிட்ட மாவட்டங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், வன்முறை சம்பவங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் புல்வாமா, அனந்த்நாக் மற்றும் சோபியான் மாவட்டங்களில் நேற்று ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதேபோல் கன்யார், நவ்ஹாட்டா, சஃபாகடல் உள்பட ஸ்ரீநகரின் 7 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட பகுதிகளில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய காஷ்மீரிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சப்சார் பட் கொல்லப்பட்டதை கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களில் பாதுகாப்புப் படை வீரர்களுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
உடல் அடக்கம்
சுட்டுக் கொல்லப்பட்ட சப்சார் பட்டின் உடல் டிரால் பகுதியில் உள்ள ரத்சுனாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க எல்லைப் பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணாகதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் கடந்த இரு தினங்களில் மட்டும் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.