சென்னை, திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களில் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.


சென்னை, திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களில் வந்திறங்கிய பயணிகளிடம் இருந்து 13கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமானநிலையத்துக்கு நேற்றிரவு சிங்கப்பூரிலிருந்து டைகர் ஏர்வேஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 7 பயணிகள் தங்கள் உடைமைகளில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று சென்னை மற்றும் மதுரையிலும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருவாய்ப் புலனாய்வுத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. தங்கத்தை சைக்கிளின் உதிரி பாகங்களாகச் செய்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சைக்கிளின் போல்டுகள், நட்டுகள், பிரேக் பாகங்கள், ஸ்பிரிங், வாஷர்கள் பெடலின் அடி பாகம் உள்ளிட்டவை தங்கத்தாலேயே செய்யப்பட்டு கடத்தி வரப்பட்டுள்ளன. மொத்தம் 13.2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.