தமிழகத்தின் கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை: தமிழகத்தின் மொத்த கடன் தொகை ரூ.3,14,366 கோடியாக உள்ளது என்று தமிழக நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்டில் அவர் தெரிவித்திருப்பதாவது,

தமிழக அரசின் கடன் சுமை மார்ச் மாதம் 2018ம் ஆண்டில் 3,14,366 கோடியாக இருக்கும்.

2017-18-ல் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக இருக்கும்.

நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக இருக்கும்.

வரும் நிதியாண்டில் தமிழக பொருளாதார வளர்ச்சி 9% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையில் மொத்த வருவாய் செலவு ரூ.1,59,363 கோடியாகும்.

கடன்கள்

பதினான்காவது நிதி ஆணையம் பரிந்துரைத்த கணக்கீட்டின்படி மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளன. 2017-2018 ஆம் ஆண்டிற்கான, நிகரக் கடன் வரம்பு 45,119 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசு 41,965 கோடி ரூபாய் மட்டுமே நிகரக் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன் 31.03.2018 அன்று, 3,14,366 கோடி ரூபாயாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 20.90 சதவீதம் மட்டுமே ஆகும் என்று ஜெயக்குமார் கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.