கமலுக்கு நடிகர் சங்கம் துணை நிற்கும்: நடிகர் விஷால்.

அரசியல் தொடர்பான கருத்துகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் துணை நிற்கும் என்று அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், அரசையும், முதலமைச்சரையும் விமர்சனம் செய்வது கமலின் தனிப்பட்ட கருத்து சுதந்திரம் என்று தெரிவித்தார். புதிய தலைமுறையின் சிறப்பு அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கமலுக்கு 65 வயதுக்குப் பிறகே ஞானோதயம் பிறந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கமலுக்கு அரசியல் ரீதியில் எந்த பாதிப்பும் வராத வகையில் நடிகர் சங்கம் துணை நிற்கும் என விஷால் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.