மேல்மருவத்தூர் பங்காரு மகன் செந்தில் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

மேல்மருவத்தூர் பங்காரு சாமியாரின் மகனும், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளருமான செந்தில்குமார் மீது கொலை மிரட்டல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த விஜய் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது கல்லூரியில் உள்ள நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் இணைந்து, மாணவர் விஜயை கடுமையாக தாக்கியதாகவும், பேஸ்புக்கில் இனிமேல் கல்லூரியை பற்றி அவதூறு பரப்பினால், கொலை செய்வோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் விஜய், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேல்மருவத்தூர் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவர் விஜயின் தாயார் பஞ்சவர்ணம் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மீது கொலை மிரட்டல், பெரும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ், மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.