ஜெயம் ரவி நடித்த வனமகன் பட டிரெய்லர்.


எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் "பேராண்மை.' இப்படத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக நடித்திருந்த "ஜெயம்' ரவியின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உடல் மொழி, கதாபாத்திர பொருத்தம் என எல்லா வகைகளிலும் அக்கதாபாத்திரத்தோடு பொருந்தியிருந்தார். விமர்சன ரீதியாகவும் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக நடிக்கிறார் "ஜெயம்' ரவி. விஜய் தயாரித்து இயக்கும் வனமகன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. "ஜெயம்' ரவி ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். திரு ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
பழங்குடி இளைஞன் ஒருவனின் காதல், அரசியல், லட்சியம் எல்லாமும்தான் கதை என்கிறார் இயக்குநர் விஜய்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.