“ஸ்வச்ச பாரத்”தும் – ” “மிச்ச “” பாரதமும்.


கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கப்பம் கட்டி வருகிறோம்.
இந்தியாவை சுத்தப்படுத்த – மத்திய அரசுக்கு…!

பலர் மறந்திருப்பார்கள் – பலர் கவனித்திருக்க
மாட்டார்கள்… நாம் கொடுக்கும் ஒவ்வொரு service tax
bill -உடனும், அரை பெர்செண்ட் ஸ்வச்ச பாரத்துக்கும்,
அரை பெர்சண்ட் பிரதமரின் கரீப் கல்யாணத்திற்கும்
சேர்த்து வரி வசூலிக்கப்படுவதை…!

இந்த வரிப்பணம் அத்தனையும் எப்படி, எங்கே, யாருக்காக
செலவழிக்கப்படுகிறது…?
நமக்குத் தெரிந்தது – 20,000 கோடி ரூபாய், பிரதமரின்
வாரணாசி தொகுதியில் ஓடும் கங்கையை சுத்தப்படுத்த….
இதற்காகவே ஒரு மத்தியமந்திரி சம்பளம் கொடுத்து
அமர்த்தப்பட்டு, அவரும் அங்கேயே “டேரா” போட்டு உட்கார்ந்திருக்கிறார் –
இந்த பணத்தை செலவழிக்கவென்றே…!

இந்தியாவில் பிரதமரின் தொகுதி மட்டும் தான்
“ஸ்வச்ச” செய்யப்பட வேண்டிய தொகுதியா…?

வரியாக வசூலிக்கப்படும் பணம் எல்லா மாநிலங்களிலும்
ஓடும் ஆறுகளை சுத்தப்படுத்த செலவழிக்கப்படுவது
தானே நியாயம்….?

தமிழகத்தில் ஓடும் முக்கிய ஆறுகளை சுத்தப்படுத்த
வேண்டாமா…? அதற்கு நிதி ஏதும் ஒதுக்கப்படாதது ஏன்..?

திருச்சியில், காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில்
ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கும் “தண்ணீர் இயக்கம்” பற்றிய
செய்திக் கட்டுரை ஒன்றை பார்த்தேன்..(கீழே தந்திருக்கிறேன்..)
எங்கள் ஊர் என்பதால் தனி ஆரவம்……

இந்த இயக்கத்தினர், ஆர்வத்துடன் குப்பைகளை அள்ளலாம்
தூய்மையாக வைத்திருக்க பிரச்சாரம் செய்யலாம்…
ஆனால், காவிரி நாசமாவதன் முக்கிய காரணம் என்ன…?

மேல சிந்தாமணியிலும், ஓயாமரியிலும் “கடல்” போல்,
வந்து காவிரியில் கலக்கும் “கழிவு சாக்கடைகள்” தான்….

இந்த கடும் கோடையில் கூட நீங்கள் போனால் பார்க்கலாம் –
காவிரியின் தென் கரையில் (சாக்கடை) நீர்
ஓடிக்கொண்டிருப்பதை….. இந்த சாக்கடை நீர் காவிரியாற்றில்
கலப்பதை தடுக்காத வரையில், காவிரி எப்படி சுத்தமாகும்…?

இந்த இயக்கத்தினரால் அந்த விஷயத்தில் என்ன செய்ய
முடியும்…? திருச்சி மாநகராட்சியும், தமிழக அரசும் தான்
இதற்கு விடை காண முடியும்… மத்திய அரசு வசூலிக்கும்
“ஸ்வச்ச வரி”யிலிருந்து தமிழகத்திற்கும் ஒரு பங்கை பெற்று,
அதை தமிழக ஆறுகளை சுத்தப்படுத்துவதற்காக
செலவழிக்க வேண்டும்.  இந்த இயக்கத்தினரும்,
மற்ற ஊர்களில் நீர் வளத்தை பாதுகாக்க செயல்படும்

இயக்கத்தினரும் ஒன்றிணைந்து ,
“ஸ்வச்ச” வரியிலிருந்து இந்தியாவின் அனைத்து
ஆறுகளையும் சுத்தப்படுத்த நிதி ஒதுக்க உரிய முறையில்
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

                                   
BY : காவிரி மைந்தன்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.